RajaDesingu.com - ராஜா தேசிங்கு நாடக மன்றம் - About us - எங்களைப் பற்றி
எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த ரங்கன் - கெங்கம்மாள் அவர்கள் ஈன்றெடுத்த மகன்கள் ர.தவமணி, ர.ராமமூர்த்தி இருவரும் 6 வயதிலிருந்து கிராமத்தில் விளையாட்டு பிள்ளைகளுடன் கூடி தெருக்கூத்து வேடம் கட்டி பிறகு கிராமத்தில் நடக்கும் திருவிழாக்களில் மு.துளசி, நாடக ஆசிரியர் உதவியுடன் தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க வைத்தனர்.

     வறுமை நிலையில் ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாது வறுமை எங்களை வாட்டிய போது எங்கள் பெரிய தாய் குப்பம்மாள் அவர்கள் எங்களின் கலை உணர்வைப் புரிந்து கொண்டு காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் நாடக வித்துவான் அமரர் என்.ஜி.தேவன் அவர்களின் மேடை இசை நாடகத்தில் பயிற்சி அளித்து 10 ஆண்டுகளாக நாடக பயிற்சி பயின்று, தெள்ளாரம்பட்டு தெய்வத்திரு, தனபால் சுவாமிகளின் நாடக மன்றங்களிலும், அமரர். திரு.கோபால் அவர்களின் நாடக மன்றங்களிலும் நடித்து, செய்யார், ஆரணி, மற்றும் வந்தவாசி போன்ற நாடகக் குழுக்களில் நடித்தும் செஞ்சியில் 2003ம் ஆண்டு இளம் கலைஞர்களை பயிற்சி தந்து அரசு பதிவு பெற்று நாடக கலை வளர்ச்சி பெறுவதற்காக இளம் தலைமுறையினருக்கு நாடகக் கலை தாக்கம் தெரிய வேண்டும் என்று எங்களின் இல்லத்தில் வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் எவ்வித கட்டணம் இன்றி இலவச உணவு ஏற்பாடுகளுடன் கிராமிய கலைச்சோலை நாடக பயிற்சி கலைக் கூடம் நடத்தி வருகின்றோம்.

     நாடக பயிற்சி நேரம் மாதம் சனி, ஞாயிறு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.

     2012ம் ஆண்டு வரை நாடகப் பயிற்சியின் ஆசிரியர் நாடக மாமணி திரு.ர.ராமமூர்த்தி அவர்களால் நாடகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு முடிய நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாடகப் பயிற்சியில் தேர்வு பெற்று தெருக்கூத்து, மேடை நாடகம், போன்ற கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். நாடக மன்றத்தைப் பாராட்டியும், எங்கள் குழுவின் ஆசிரியரும் ர.ராமமூர்த்தி அவர்கட்கு 50க்கும் மேற்பட்ட விருதுகளும், தஞ்சாவூர் கலைப் பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் அய்யா முத்து அவர்களாலும், முன்னாள் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஔவை நடராஜன் அவர்களின் பாராட்டுதலும், புதுதில்லி தேசிய நாடக ஆய்வாளர் உயர்திரு. அரிமளம் பத்மநாபன் அவர்களின் பாராட்டுதல், விருதுகளும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. விஜயக்குமார் அவர்களின் பாராட்டுகளும், விருதுகளும் மற்றும் மத்திய அமைச்சர்கள் உயர்திரு. ஜெகத்ரெட்சகன், உயர்திரு. செஞ்சி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களால் விருதுகளும், பாராட்டுதலும் மற்றும் கிராமங்கள் தோறும் ஊராட்சிமன்றத் தலைவர் விருதுகளும், பாராட்டுகளும் பெற்று சுமார் 31.12.2013 ஆண்டு முடிய 36 ஆண்டுகள் கலைத்துறையில் 10 ஆயிரம் மேடைகளில் நாடகம் நடத்தியும் வருகின்றோம்.

     மற்றும் குடி குடியைக் கெடுக்கும் குறும்படம் திரைத்துறை இயக்குநர் திரு.பாரதிசேரன் அவர்களின் குறும்படத்தில் நடித்து மக்கள் தொலைக்காட்சியில் சிறந்த குறும்படம் என பாராட்டுதல் பெற்றது.

     ராஜா தேசிங்கு நாடக மன்றக் குழுவை நடத்தி வருவதோடு, விழுப்புரம் மாவட்ட நாடக சங்கத் தலைவர் பொறுப்பையும் ஏற்று செயலாற்றி வருகின்றோம்.

     ராஜா தேசிங்கு நாடக மன்ற பொறுப்பாளர்கள், நாடக ஆசிரியர் நாடக மாமணி ர.ராமமூர்த்தி அவர்கள், தலைவர். கு.ஆறுமுகம் மற்றும் ஏ.பாண்டியன் அவர்கள், பொதுச்செயலாளர் திரு.ர.தவமணி, பொருளாளர் கு.அறிவுக்கரசி, துணைச் செயலாளர் திரு.ப. சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திரு.மு.அ.ராஜேந்திரன், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் திரு.மு.அ. ராஜேந்திரன், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர், சட்ட ஆலோசகர்கள், உயர்திரு க.செம்மலை, பி.எஸ்.சி., பி.எல்., உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. திருமலை, எம்.ஏ., பி.எல்., அவர்கள்.

     செஞ்சி வட்ட வழக்கறிஞர் அவர்களின் ஒப்புதலின்படி ஆண்டுதோறும் மன்றத்தைப் புதுப்பித்து இளம் கலைஞர்களை ஒருங்கிணைத்து சிறப்புடன் சங்கத்தை நடத்தி வருகின்றோம்.

     விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கோ.மோட்டூர் கிராமத்தில் வசித்து வந்த ரெங்கநாயகி - குப்பன் ஈன்றெடுத்த குமாரர் திரு.கு.ஆறுமுகம் அவர்கள் சிறிய வயதில் கிராமத்தில் நடக்கும் தெருக்கூத்து நாடகங்களில் நடித்து 5 ஆண்டுகள் ர.ராமமூர்த்தி அவர்களின் மேடை நாடகப் பயிற்சி பெற்று செஞ்சி ராஜா தேசிங்கு நாடக மன்றத்தில் அம்மன் வேடம், பெண் வேடம், கதாநாயகன் போன்ற சிறப்பு வேடங்களில் நடித்து அரசு விழாக்களிலும், கிராமங்கள் தோறும் மக்களின் பாராட்டுதலும், பல விருதுகளும் பெற்று தற்போது செஞ்சி ராஜா தேசிங்கு நாடக மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.

தற்போது நடத்தி வரும் நாடகங்கள்

இராமாயணம்

1. சீதா கல்யாணம்
2. பாதுகா பட்டாபிஷேகம்
3. வீரவாலி
4. தசரதர் திருமணம்
5. மயில் இராவணன்
6. லங்காதகனம்
7. ராமர் பட்டாபிஷேகம்
8. ராமர் வாலி யுத்தம்
9. இந்திரஜித் (எ) நிகும்பலையாகம்
10. முப்பிறவி

மகாபாரதம்

1. கர்ணமோட்சம்
2. வீரபாஞ்சாலி
3. கீசகன் சம்மாரம்
4. ராஜ சுய யாகம்
5. துஷ்யந்தன் சகுந்தலை
6. வீர அபிமன்யு
7. இடும்பன் வதை
8. கிருஷ்ணன் தூது
9. நச்சுப் பொய்கை
10. அரக்கு மாளிகை

சிவ புராணம், சக்தி புராணம்

1. சிவகங்கை திருமணம்
2. அங்காள பரமேஸ்வரின் உற்சவம்
3. சிங்க வாகன தேவி
4. ரேணுகாம்பாள் தரிசனம்
5. அருள் தருவாள் அம்பிகை
6. கண்டன் கார் கோடகன்
7. அரிசக்தி சிவசக்தி அவதாரம்
8. மயினருத்திரி மரகதமாலா
9. சுவாமி அய்யப்பன்
10. கருமாரியம்மன் தோற்றம்

சரித்திர - சமூக நாடகங்கள் (நாவல் நாடகம்)

1. பத்தினியின் சாபம்
2. மாற்றான் தாய் கொடுமை
3. தென்னாட்டு தேனரும்பு
4. பூக்காரி பொன்னி
5. பெண் குலத்தின் பொன்விளக்கு
6. விதியின் விளையாட்டு
7. நளாயினி
8. நாட்டியக்காரி
9. கலிங்க நாட்டுக் கள்வன்
10. அமுதாவின் திருமணம்
11. தெய்வந்தான் சாட்சி
12. மனித தெய்வம்
13. கன்னித்தீவு கனகராணி
14. இறைவன் தந்த தீர்ப்பு
15. ஜீவா என் ஜீவா
16. கண்ணகி கோவலன்
17. வீரவனராணி
18. ஒற்றைக் கண்ணன்
19. புலிக்கொடி நாட்டிய புரட்சி வீரன்
20. சிலை வடித்த செல்வன்

பொது நாடகங்கள்

1. அரிச்சந்திரா
2. சத்தியவான் சாவித்திரி
3. சௌந்திரவள்ளி மோட்சம்
4. வள்ளித் திருமணம்
5. வன்னிய புராணம்
6. விநாயகர் புராணம்

அரசு விழாக்களில் நடத்தும் சமூக நாடகங்கள்

1. பெண்ணடிமை
2. வரதட்சணைக் கொடுமை
3. குடியினால் வரும் கேடு
4. வாழ்ந்து காட்டுவோம்
5. எய்ட்ஸ் என்னும் எமன்
6. சிறுசேமிப்பு
7. சுத்தம் சுகம் தரும்
8. வாழ்விக்க வந்த வள்ளலார்


இணைய பக்க முகவரி: https://www.rajadesingu.com:443/siteinfo/aboutus.html


உங்கள் கருத்துக்களை அனுப்பவும்!

மின்னஞ்சல் : 

பொருள் :       

கருத்துக்கள்:




ராஜா தேசிங்கு நாடக மன்றம்

இணையதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு : கௌதம் இணைய சேவைகள்